குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024 - கடகம்

குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024 - கடகம்

திட்டமிடுதலை லட்சியமாக கொண்டு விளங்கும் கடக ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு அற்புத பலன்களைப் பெறுவீர்கள். உங்களின் ராசிநாதன் விரைய ஸ்தானத்தில் இருப்பது உங்களின் பொருளாதாரத்தில் சில ஏற்ற இறக்கம் இருந்துவரும். அட்டம சனியின் தாக்கம் குரு அருளால் சற்று குறையும். உங்களின் குடும்பத்தில் சின்ன சச்சரவுகள் இருந்து வந்தாலும், அதனால் பாதிப்பு அதிகம் இருக்காது. 
 
உங்களின் தொழில் ஸ்தானத்தில் தனாதிபதி சூரியன் அமர்வது உங்களின் பல நாட்களின் கனவான தொழிலை துவங்கும் முயற்சி வெற்றியைத் தரும். உங்களுக்கு பல நாட்கள் எதிர்ப்புகளை தந்து வந்த எதிரி பல சிக்கல்களில் மாட்டி உங்களுக்கு தொல்லைக் கொடுப்பதை நிறுத்தி அவரின் வேலையை கவனிப்பார். 
 
உங்களின் முயற்சி ஸ்தானத்தில் கேது இருப்பதால், எடுத்தக் காரியத்தை விரைவில் நடத்தி தருவார். புதிய முயற்சி திட்டம் எதையும் ஆய்வு செய்யாமல் அவசர முடிவு எடுக்காதீர்கள். இதனால் நீங்கள் பண இழப்பிற்கு காரணாமாகலாம். முடிந்த அளவு எங்காவது பணி செய்து வருவது நல்லது. 
 
கூட்டுத் தொழில் செய்வதில் அடிக்கடி கவனம் செலுத்துவது நல்லது. ஒன்லைன் மூலமான தொழிலைத் தவிர்க்கவும். மதம் சார்ந்த பிரச்சனைகளில் தலையிடுவதைக் குறைத்து கொள்வது நல்லது. பொருளாதார நிலை மேன்மை அடைவீர்கள். தேவைகளுக்கு பணவரவு இருக்கும்.
 
பரிகாரம்:
 
சனிக்கிழமை ராகு காலத்தில் வைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி எள் கலந்த உணவு மிருகத்திற்கு வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் நன்மை தரும்.